அல்சரிலிருந்து தப்பிக்க சாப்பிட வேண்டியவை - தவிர்க்க வேண்டியவை.. தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக தற்போது இருக்கும் குழந்தைகளுக்கு அல்சர் நோய் அதிகமாக ஏற்படுகின்றது.
இந்த நோய் உரிய நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதால் ஏற்படுகின்றது. இதனை ஆரம்பத்தில் கண்டுக் கொள்ளாமல் இருந்தால் அல்சரை கூடி புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
நமது வயிற்று வலிக்கு பின்னால் இருப்பது அல்சர் தான் என்பதனை உறுதிச் செய்து கொள்வதற்காக சில அறிகுறிகள் இருக்கின்றன.
அந்த வகையில் அல்சர் ஏற்படுவதற்கான காரணங்களையும் அதற்காக என்ன செய்ய வேண்டும்? என்பதனையும் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
அல்சருக்கான அறிகுறிகள்
1. சிறுகுடலில் அல்சர் ஏற்படும் போது வயிறுபகுதியில் வலி ஏற்படும். இது ஒரு வகை எரிச்சல் உணர்வை குறிக்கின்றது. நெஞ்சு மற்றும் தொப்புள் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் ஒரு சில நிமிடங்கள் தொடங்கி சில மணி நேரம் வரையிலும் இந்த வலி ஏற்படும்.
2. உணவுகள் சரியாக செரிமானத்திற்குட்படாமல் நெஞ்சில் நிற்பது போன்று உணர்வு ஏற்படும். இதனால் வாந்தி கூட வரலாம். வயிறு உப்பசம் மற்றும் இரைச்சல் போன்ற பிரச்சனைகள் இருப்பதால் சில நேரங்களில் குமட்டல் பிரச்சினை ஏற்படும்.
Image - healthline
3. உடல் எடை திடீரென குறைய ஆரம்பிக்கும். ஒரு நாளுக்கு மேல் பசியின்மை தொடர வாய்ப்பு இருக்கின்றது.
காரணங்கள்
1. காரசாரமான உணவுகள் அதிகமாக சாப்பிடுதல்.
2. அழற்சிக்கு எதிரான மருந்துகளான Aspirin மற்றும் ibuprofen போன்ற மருந்துகளை நீண்ட காலமாக எடுத்துக் கொள்ளல்.
3. ஹெச். பைலோரி பாக்டீரியா தொற்று.
4. மது அருந்துவது மற்றும் புகைப்பிடித்தல்.
5. ஸ்ட்ரெஸ் மற்றும் கவலை போன்ற பிரச்சனைகள்.
தீர்வு
1. சிவப்பு திராட்சை, ஆப்பிள், பெர்ரி பழம் போன்ற ஃபிளவோனாய்ட்ஸ் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிட வேண்டும்.
2. தயிர், மோர் போன்ற ப்ரோபயாடிக் உணவுகளை எடுத்து கொள்ளல்.
3. மது, புகையிலை பழக்கங்களை கை விடல்.
4. காய்கறிகள், பழங்கள் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
5. உணவு சமைக்கும் பொழுது காரமான மசாலா உணவுகள், எண்ணெய் மிகுதி பயன்படுத்தக் கூடாது.
6. துரித உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
7. யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவைகளை தினமும் கடைபிடிக்க வேண்டும்.
8. அமில உற்பத்தியை குறைக்கும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்து கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |