பதற்றத்தை குறைக்கும் உணவுகள்! முந்திரி முதல் மஞ்சள் வரை.. யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா?
பொதுவாக நம்மில் சிலருக்கு திடீரென மனஅழுத்தம் அதிகரிக்கும் பொழுது இயற்கையாகவே பதட்டம் ஏற்படும்.
இது போன்ற பிரச்சினையுள்ளவர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் பதறுவார்கள்.
அவர்களை அவர்களே கட்டுபடுத்தினால் தான் சரியாகும். இந்த மாதிரியான பதட்டம் நம்மை நெருங்கக் கூடிய ஆபத்திலிருந்து நம்மை எச்சரிக்கை செய்யக்கூடிய உடலின் ஒரு ரியாக்ஷனாக அமைகிறது.
மன அழுத்தம், பதட்டம் இவை இரண்டு அதிகமாக இருக்கும் ஒரு நபருக்கு அவருடைய வேலையைக் கூட அவர்களால் செய்ய முடியாமல் ஆக்கி விடும்.
இது போன்ற தாக்கங்களை ஏற்படுத்தும் நரம்புகளை அமைதிப்படுத்த உதவும் சரியான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது அவசியம் அல்லவா? அப்படியான சில உணவுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
பதட்டத்தை கட்டுபடுத்தும் உணவுகள்
1. காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ளவும். ஏனெனின் மகிழ்ச்சி ஹார்மோன் என்று சொல்லப்படும் “ செரோட்டோனின்” உற்பத்திக்கு இந்த உணவுகள் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
2. சிட்ரஸ் பழங்கள் எடுத்து கொள்வது அவசியம். எம்மை உருக்கும் மன அழுத்த பிரச்சினையை கட்டுபாட்டில் வைப்பதற்கு வைட்டமின் சி அவசியமாகும். ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற பழங்களை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும்.
3. மெக்னீசியம் நிறைந்த உணவுகள் பதட்டத்தை கட்டுபடுத்தும். கீரை, கேல், அவகேடோ, பீன்ஸ் மற்றும் வாழைப்பழங்களில் மெக்னீசியம் சத்து அதிகமாக இருக்கின்றது. இதனால் மூன்று வேலை உணவுகளில் இது போன்ற உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும்.