பேச்சுவார்த்தைக்கு நாங்க தயார் - உக்ரைன் அதிரடி அறிவிப்பு
உக்ரைன் மற்றும் ரஷியா போர் தாக்குதல்கள் மூன்றாவது நாளாக நடைப்பெற்று வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனால், உக்ரைன் தங்களை தற்காத்துகொள்ள ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையும் உருவாகி இருக்கிறது.
உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனிடையே, போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக உக்ரைன் அறிவித்து இருக்கிறது.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் (Volodymyr Zelenskiy)தெரிவிக்கையில், போர் நிறுத்தம், அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாரக உள்ளது.
பேச்சுவார்த்தையை எங்கு, எப்போது நடத்துவது என்பது குறித்து உக்ரைன் மற்றும் ரஷியா ஆலோசித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.