குடிநீரில் கழிவுநீர்: முகர்ந்து பார்த்துவிட்டு உதயநிதி செய்த காரியம்
உதயநிதி ஸ்டாலின் அவரது தொகுதியில் செய்து வரும் களப்பணிகள் தொகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார்.
அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், வாரிசு அரசியல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழும் என்ற காரணத்தால் அப்பதவி வழங்கப்படவில்லை.
இருப்பினும், வெற்றி பெற்ற முதல் நாளில் இருந்தே தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து விசிட் அடிக்கும் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.
தேங்கிக் கிடக்கும் குப்பைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி அகற்றுவது, சாக்கடை நீர் தேங்காமல் அதனை தூய்மைப்படுத்துவது என பம்பரமாக சுழன்று வேலை பார்த்து வருகிறார். அத்துடன், கொரோனா நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்து வருகின்றார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, டாக்டர் நடேசன் சாலை பகுதி மக்களை சந்தித்து கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டேன்.
குடிநீர், கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, டாக்டர் நடேசன் சாலை பகுதி மக்களை சந்தித்து கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டேன். குடிநீர், கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தேன். pic.twitter.com/9hDHRfAjQS
— Udhay (@Udhaystalin) May 23, 2021