உதயநிதி ஸ்டாலினிடம் தங்கம், வைரம் எதுவும் இல்லையா? அடுத்தடுத்து எழும்பும் கேள்வி
சென்னை சேப்பாக்கத்தில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் ணுஏப்ரல் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடந்து வருகின்றது.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே உள்ளதால், வேட்பாளர்கள் தீவிரமாக செயல்படுகின்றனர்.
இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேப்பாகம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இரண்டாவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்யும் உதயநிதி ஸ்டாலினின் சொத்து விபரம் வெளியாகியுள்ளது.

உதயநிதியின் சொத்து விபரம்
உதயநிதி ஸ்டாலினுக்கு அசையும் சொத்துக்கள் ரூ.12.92 கோடி உள்ளதாகவும், அசையா சொத்துக்கள் ரூ.7.72 கோடி மதிப்பில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் விவசாய நிலம் ஒன்றினையும், வேளச்சேரியிலும் வேளாண்மை அல்லது பிற இடங்களை வைத்துள்ளார். அதுமட்டுமின்றி ராயபேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதாகவும், தன்னிடம் ரொக்கமாக ரூ.50 ஆயிரம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

TMB வங்கியில் ரூ.14.56 லட்சமும், ஆக்சிஸ் வங்கியில் ரூ.8.44 லட்சமும், தேர்தல் செலவிற்காக மற்றொரு வங்கியில் ரூ.10 லட்சமும் இருக்கின்றதாம்.
மேலும் 1 கோடி மதிப்பில் டிஃபென்டர் காரும், ரூ. 23 லட்சம் மதிப்பில் இனோவா காரும் வைத்துள்ளார். ஆனால் இவரிடம் தங்கம், வைரம், வெள்ளி எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மனைவியிடம் சொத்து எவ்வளவு?
இவரது மனைவி கிருத்திகாவிடம் ரூ.13.25 கோடி மதிப்பில் அசையும் சொத்து, அசையா சொத்து எதுவும் இல்லை... கையில் ரூ.75 ஆயிரம் ரொக்கம் இருப்பதாகவும், அவரிடம் கார், பைக் என எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மனைவியிடம் ரூ. 1,87.82,720 மதிப்பில் 1600 கிராம் தங்க நகையில் இருப்பதாகவும், மகள் தன்மயா பெயரை குறிப்பிட்டுள்ள உதயநிதி, மகன் இன்பன் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை.
ஏன் இன்பன் பெயரை குறிப்பிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரிடம் எந்தவொரு கொடுக்கல், வாங்கல் இல்லை என்பதால் அவரை குறிப்பிடவில்லை என வழக்கறிஞர் கூறுகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |