கீர்த்தி சுரேஷிற்கு இப்படியொரு குணம் இருக்குதா? நெருங்கிய தோழி சமந்தா உடைத்த உண்மை
நடிகை கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு தெரியாத பல விடயங்களை சமந்தா தற்போது கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சமந்தா, கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகளாக இருந்துவரும் சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ். நடிப்பை தாண்டிய இருவரும் தோழிகளாகவும் வலம் வருகின்றனர்.
நடிகை சமந்தா சமீபத்தில் ராஜ் நிடிமோருவைக் காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது தனது உலகம் ராஜ் தான் என்று கூறியதுடன், மகிழ்ச்சியாக இருந்துவருவதாகவும் கூறியுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷும் தனது நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் ஆண்டனி தட்டிலை டிசம்பர் 12, 2024 அன்று கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் தற்போதும் தோழிகளாக வலம்வரும் நிலையில், கீர்த்தி சுரேஷ் குறித்து பல வதந்திகளும் வெளியாகியது. இந்நிலையில், அவருக்கு குடிப்பழக்கம் இல்லை... வெளியில் தெரியாத மற்றொரு பக்கமும் கீர்த்தி சுரேஷிற்கு உள்ளதாக நடிகை சமந்தா கூறியுள்ளார்.

சமந்தா கூறியது என்ன?
கீர்த்தி சுரோஷிற்கு அதீத நகைச்சுவை உணர்வு உள்ளதாகவும், அவருடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி நள்ளிரவு கடந்தாலும் சிரிப்பு சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு நகைச்சுவையாக பேசிக்கொண்டே இருப்பார்.
நொடிக்கும் குறைவான நேரத்தில் ரைமிங் வசனம் பேசி, அருகில் இருப்பவர்களை டேமேஜ் செய்துவிடுவார் என்றும் தனக்கு தெரிந்தவர்களின் அதிகமாக சிரிக்க வைக்கும் பெண் அவர் தான் சமந்தா கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |