தளர்வுகளால் கொரோனாவை காற்றில் பறக்க விட்ட பொதுமக்கள்; காய்கறிகள் விலை எவ்வளவு தெரியுமா?
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமானதால் தமிழகத்தில் ஊரடங்கு தொடர்ந்து அமல் படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே மே 10 முதல் 24 வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஆனாலும், கொரோனாவின் தாக்கம் குறையாததால், மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஏதுவாக இன்று ஒருநாள் மட்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
இதனால், பொதுமக்கள் அனைவரும் முந்தி அடித்துக்கொண்டு காய்கறிக் கடைகளில் கூட்டம் கூட்டமாகக் காத்திருக்கின்றனர். காய்கறிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், விலை அதிகமாக இருந்தாலும் வேறு வழியில்லாததால் பொதுமக்கள் அனைவரும் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். அதிலும், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (மே 23) ஒரு கிலோ தக்காளி விலை 40 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று இதன் விலை 5 ரூபாயாக மட்டுமே இருந்தது. ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாயிலிருந்து இன்று 16 ரூபாயாக உயர்ந்துள்ளது. அவரைக்காய் விலை நேற்று 30 ரூபாயிலிருந்து இன்று 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், பல இடங்களில் மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் பொருட்களை வாங்க குவிந்துள்ளது நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடைகள், திறப்பு, பேருந்துகள் இயக்கம் போன்றவற்றால் இன்று தமிழகம் முழுவதும் பிரதான சாலைகள் வழக்கம் போல் பரபரப்பாக காணப்படுகிறது.
காய்கறிகள் விலை விபரம்;
தக்காளி - ரூ.40 வெங்காயம் - ரூ.16 அவரைக்காய் - ரூ.150 பீன்ஸ் - ரூ.150 பீட்ரூட் - ரூ.30 வெண்டைக்காய் - ரூ.40 நூக்கல் - ரூ.30 உருளைக் கிழங்கு - ரூ.17 முள்ளங்கி - ரூ.15 புடலங்காய் - ரூ.25 சுரைக்காய் - ரூ.20 பாகற்காய் - ரூ.20 கத்தரிக்காய் - ரூ.40 குடை மிளகாய் - ரூ.35 கேரட் - ரூ.30 காளிபிளவர் - ரூ.20 சவுசவு - ரூ.20 தேங்காய் - ரூ.20 வெள்ளரிக்காய் - ரூ.15 முருங்கைக்காய் - ரூ.40 இஞ்சி - ரூ.40 பச்சை மிளகாய் - ரூ.40 கோவைக்காய் - ரூ.40