காதலுக்காக ராஜ நாகங்களுக்குள் அரங்கேறிய போர்: காத்திருந்த பெண் ராஜநாகம்
கடுமையான விஷப் பாம்புகளில் மிகவும் நீளமான ராஜ நாகங்கள் இரண்டு, காட்டில் இருந்த பெண் ராஜ நாகத்தை கவர்ந்திழுக்க, கடுமையாக சண்டையிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
பெண் பாம்பின் முன்னிலையில் இரண்டு பாம்புகள் மோதிக் கொண்ட காட்சி இணையத்தில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சண்டையின் முடிவில், ஒன்று தோல்வியை ஒப்புக் கொண்டு காட்டிற்குள் விலகிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
இதுவரை இந்த வீடியோவை சுமார் 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர், யூடியூப்பில் உள்ள ஸ்மித்சோனியன் சேனல் (Smithsonian Channel) வீடியோவின் விளக்கத்தில், 'இரண்டு ஆண் ராஜா நாகப்பாம்புகள் காதலை அடைய நடத்திய போராட்டம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெற்றியாளரை வாழ்த்துவதற்காக அருகில் காத்திருக்கும் பெண் ராஜ நாகப்பாம்பு, தனது துணையை வரவேற்க தயாராக உள்ளதையும் காணொளியில் காண முடிகின்றது.