உங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் இருக்காங்களா? அப்போ இது உங்களுக்குத்தான்
ஒரு பெண்ணுக்கு மிகப் பெரும் மதிப்பை பெற்றுத் தருவது அவளின் தாய்மை தான். பத்து மாதம் வயிற்றில் சுமந்த கருவை பெற்றெடுக்கும்போது அவள் அடையும் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது.
அதுவும் இரட்டைக் குழந்தைகள் என்றால் அவளின் சந்தோஷம் இரட்டிப்பாகும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. ஒற்றைப் பிள்ளையை வைத்துக்கொண்டே அந்தக் குழந்தைக்கு சரியான நேரத்தில், சரியான அளவில் தாய்ப்பால் கொடுப்பதற்கு தாய்மார் பாடுபடுவர்.
அதிலும் இரட்டைப் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் எப்படி சமாளிப்பார்கள். அதிலும் குறிப்பாக, தாய்ப்பால் கொடுப்பதை எவ்வாறு சமாளிப்பார்கள்? அவற்றை சமாளிப்பதற்கு சிரமப்படும் தாய்மார்களுக்கு கீழுள்ள டிப்ஸ் உதவியாக இருக்கும்.
image - istock
தாய்ப்பால் கொடுப்பதற்கான டிப்ஸ்
இரட்டையர்களை பெற்ற தாய்மார்களுக்கு சில நேரங்களில் பால் சுரப்பு குறைவாக இருந்தால், ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படும்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு குழந்தைக்கு பாலூட்டி சிறிது நேரத்தின் பின்னர் அடுத்த குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். அதுமட்டுமில்லாமல் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தாய்க்கு பாலூட்டும்போது வலி மற்றும் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
அதனால் குழந்தை பிறந்த சில நாட்களுக்கு ப்ரஸ்ட் பம்பை பயன்படுத்தி தாய்ப்பாலை பதப்படுத்தி குழந்தைக்கு கொடுக்கலாம்.
image - newsweek
தாய்ப்பால் சேமிப்பு
தாய்ப்பால் நன்றாக சுரக்கும் சந்தர்ப்பங்களில் போதியளவு தாய்ப்பாலை சேமித்து வைத்துக்கொள்வது சிறந்தது. அப்போதுதான் இரண்டு குழந்தைகளுக்கும் தேவையான தாய்ப்பாலை சரியாகக் கொடுக்க முடியும்.
தாய்ப்பால் கொடுக்கும் முறை
இரண்டு மார்பகங்களிலும் பால் ஊட்டுவது அவசியமாகும். வலது, இடது என இரண்டு மார்பகங்களிலும் மாறி மாறி பால் ஊட்ட வேண்டும்.
தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் சந்தர்ப்பங்களில் இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கும் போது அவர்களுக்கிடையிலான புரிதல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
image - the bumb
இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்கள் மிகவும் பொறுமையாக இருந்து குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவது அவசியமாகும்.
ஊட்டச்சத்துமிக்க, தாய்ப்பாலை அதிகரிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.