வெற்றி பெற்றதும் முதன்முதலில் பெற்றோரை பார்க்க வந்த விஜய்! வைரலாகும் புகைப்படங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய் பெற்றோரிடம் ஆசி வாங்கிய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஜய் வெற்றி
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த நடிகர் விஜயின் அரசியல் வருகை தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் மத்தியிலும் தவெக தொண்டவர்கள் மத்தியிலும் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு காணப்பட்டது.

இந்நிலையில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 106 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

முதல் தேர்தலிலேயே, தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது வரலாற்று சாதனையாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் விஜய் தனது பெற்றோரை சந்தித்து, ஆசிபெற்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |