இப்போதான் களமே சூடு புடிச்சுருக்கு! வாங்க ... வைரலாகும் ஜூலியின் புதிய வீடியோ
தமிழக சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டு, முன்னிலை வகிக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை ரசிகர்களும் தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தலுக்கு முன் விஜயை விமர்சித்து தள்ளிய திமுக ஆதரவாளர் ஜூலி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் ஜூலி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலிக்கும் தவெகவிற்கும் இடையில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே கடுமையான மோதல் ஆரம்பித்தது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, பிக்பாஸ் ஜூலி திமுகவிற்கு (DMK) ஆதரவாகவும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) எதிராகவும் அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருந்தார்.

தமிழகவெற்றிக்கழம் வேலூரில் பிரச்சார கூட்டத்தை நடத்திய போது, விஜய் வழக்கம் போல ஒரு குட்டி கதை கூறியிருந்தார்.
அதை விமர்சனம் செய்து பிக்பாஸ் ஜூலி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதால், ஜூலிக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையில் ஒரு இணையவழி போர்களமே உருவானது.

அப்படியாக மாறி மாறி தவெக கட்சிக்கு எதிராகவும், விஜயை நேரடியாக விமர்சித்தும் காணொளி வெளியிட்டு வந்த ஜூலி, தவெக முன்னிலையில் இருக்கும் நிலையில், தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |