சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன?
நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் சாலிகிராமத்தில் தனக்கு சொந்தமான வீட்டை இடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகர் விஜய் கடைசியாக ஜனநாயகன் படத்திற்கு பின்பு நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதியிலும் போட்டியிட்டுள்ளது.

திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடும் நிலையில், தற்போது நீலாங்கரையில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வருகின்றார்.
சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் விஜய் முதலீடு செய்துள்ள நிலையில், சாலிகிராமத்தில் ஒரு வீடும் வைத்துள்ளார்.

வீட்டை இடிக்கும் விஜய்?
சாலிகிராமம் வீட்டில் தான் நடிகர் விஜய் ஆண்டனி ஸ்டூடியோ வைத்திருந்தார். அவர் காலி செய்த பின்பு விஜய்யின் தந்தை தனது அலுவலகமாக வைத்து, அங்கு அன்னதானமும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சாலிகிராமம் வீட்டை இடித்துவிட்டு அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பை கட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
தேர்தல் முடிந்து சில தினங்களில் விஜய், ராசியான வீட்டை இடிப்பதை நினைத்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

சமீபத்தில் அண்ணாநகரில் இருந்த வீட்டை 35 கோடி ரூபாய்க்கு விற்று, அதனை தேர்தல் செலவுக்காக இல்லாமல் விவாகரத்து வழக்கிற்காக செலவு செய்வதாக தகவல் வெளியாகியது.
விஜய் மற்றும் சங்கீதாவின் விவாகரத்து வழக்கும் ஏப்ரல் 20ம் தேதி விசாரிக்கப்பட்ட நிலையில் இதனை ஜுன் 15ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் முடிவு மே மாதம் 4ம் தேதி வரவிருக்கும் நிலையில், விஜய் ஆஸ்திரேலியாவிற்கு செல்வதாக பேசப்பட்டு வருகின்றது. முக்கியமான நாளில் விஜய் ஏன் இந்த முடிவை எடுத்துள்ளார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |