118 எம்எல்ஏ கன்பார்ம் : தமிழ்நாட்டின் முதலமைச்சராகிறார் விஜய்! விசில் போடும் ரசிகர்கள்
தமிழக வெற்றி கழகத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது தங்களின் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் தான் என்பது உறுதியாகியுள்ளது.
சினிமாவில் கோடிகளில் சம்பளம் பெறும் முன்னணி நடிகெரா திகழ்ந்த விஜய் தன்னை உயர்த்திய ரசிகர்களுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றிகடன் செலுத்த வேண்டும் என்ற நோக்கிவேயே அரசியலில் களமிறங்கினார்.

2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றிபெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதில் தெளிவான பெரும்பான்மை கிடைக்காததால் இன்று வரையில் சிக்கல் நிலவி வந்தது.

ஆட்சியமைக்க 118 எம்எல்ஏ-க்கள் தேவைப்பட்ட நிலையில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடியது. காங்கிரஸ் தவெக கூட்டணியில் இணைந்தது, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக கூறியது, இந்நிலையில் இன்றை தினம் விசிக ஆதரவு அளித்துள்ள நிலையில் 118 எம்எல்ஏ-க்களை பெற்று தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்கிறார்.