தும்கூர் பாணியில் அசத்தல் புதினா சட்னி... இந்த பொருட்கள் இருந்தால் போதும்
பொவுவாகவே பெரும்பாலானவர்கள் வீடுகளில் காலை உணவுக்கு இட்லி, தோசை செய்வது வழக்கம்.அதற்கு தொட்டுக்கொள்ள வழக்கமான சட்னி செய்து அழுத்துவிட்டதா?
அப்படியென்றால் ஒரு முறை இந்த கர்நாடகா ஸ்பெஷல் தும்கூர் சட்னியை செய்து பாருங்க. வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் இன்னும் இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 5-6
வரமிளகாய் - 3
பச்சை மிளகாய் - 2
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி
துருவிய தேங்காய் - 1 கப்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 3 தே.கரண்டி
கடுகு - 1/4 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/4 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதே பாத்திரத்தில், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், வரமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து சுருங்கும் வரையில் வதக்கி, அதனுடன் பெருங்காயத் தூள், துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும்.
அதன் பின்பு வதக்கிய பொருட்களை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, சிறிது நீரை ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும் (தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்துக்கொள்ளலாம்)
இறுதியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் தும்கூர் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |