சினிமா பாணியில் டிடிஎஃப் வாசன் கொடுத்த சர்ப்ரைஸ்! அசந்து போன மனைவி
பிரபல யூடியூபரான டிடிஎப் வாசனுக்கு அவரது மாமன் மகளுடன் அண்டையில் திருமணம் நடைபெற்ற நிலையில், தனது காதல் மனைவியின் பிறந்த நாளுக்கு டிடிஎப் வாசன் சினிமா பாணியில் சர்ப்ரைஸ் கொடுத்த காணொளி தற்போது இணையத்தில் படு வைராலாகி வருகின்றது.
டிடிஎப் வாசன்
நடிகர்களைப்போல யூடியூப் வாசிகளும் பிரபலங்களாக வலம் வருவது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாகி வருகிறது.

அப்படி பிரபலமான யூடியூப் செலிப்ரிட்டிகளுள் ஒருவர் தான் டிடிஎஃப் வாசன். பிரபல யூடியூபராக வலம் வரும் டிடிஎஃப் வாசன், அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி போலீசாரால் அடிக்கடி கைது செய்யப்படுவது வழக்கம்.
அவர் பேமஸ் ஆனதற்கு முக்கிய காரமே சர்ச்சையில் சிக்குவது தான் என்றால் மிகையாகாது. அதிவேகமாக பைக் ஓட்டுவது, பைக் ஓட்டிக்கொண்டே சாகசம் செய்வது என சேட்டைகளை செய்வதில் கெட்டிக்காரான இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இளைஞர் சமூகத்தை கெடுக்கும் வகையில் காணொளிகளை வெளியிடுவதால், இவருடைய யூடியூப் சேனலையே பிளாக் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கண்டித்தது. கார் மற்றும் பைக் லைசன்ஸ்கள் கூட பறிமுதல் செய்யப்பட்டது.

பல்வேறு சர்சைகளில் சிக்கி கைதாகியே பிரபலமான டிடிஎப் வாசன் இதுவரையில் யாரும் செய்யாத வகையில், வீட்டை விட்டு ஓடிபோய் திருமணம் செய்வதையே கன்டென்டாக மாற்றி மீண்டும் ட்ரெண்டானார்.

பல பிரச்சனைகள் தன்னை சூழ்ந்தாலும், செம்ம கெத்தாக அனைத்தையும் சமாளித்து வரும் டிடிஎஃப் வாசன், தற்போது தமிழ் சினிமாவில் ஐபிஎல் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிகமாகியுள்ளார்.

இந்நிலையில், திருமணத்தின் பின்னர் தனது காதல் மனைவியின் முதல் பிறந்தநாளை சினிமா பாணியில் கொண்டாடி அசத்தியுள்ளார் குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |