ஓடிபோய் திருமணம் செய்வதையே கன்டென்டாக மாற்றிய TTF வாசன்! வைரலாகும் முழு காணொளி
பிரபல யூடியூபரான டிடிஎப் வாசனுக்கு அவரது மாமன் மகளுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவரே வெளியிட்டுள்ள திருமண காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
டிடிஎப் வாசன்
நடிகர்களைப்போல யூடியூப் வாசிகளும் பிரபலங்களாக வலம் வருவது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாகி வருகிறது.
அப்படி பிரபலமான யூடியூப் செலிப்ரிட்டிகளுள் ஒருவர், டிடிஎஃப் வாசன். பிரபல யூடியூபராக வலம் வரும் டிடிஎஃப் வாசன், அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி போலீசாரால் அடிக்கடி கைது செய்யப்படுவது வழக்கம்.
அதிவேகமாக பைக் ஓட்டுவது, பைக் ஓட்டிக்கொண்டே சாகசம் செய்வது என இல்லாத சேட்டைகளை செய்வதில் கெட்டிக்காரான இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இளைஞர் சமூகத்தை கெடுக்கும் வகையில் காணொளிகளை வெளியிடுவதால், இவருடைய யூடியூப் சேனலையே பிளாக் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கண்டித்தது.
பிறகும் திருந்தாத வாசன் காரில் போன் பேசியபடியே வேகமாகச் சென்று மற்றொரு வழக்கில் சிக்கினார். அவரை யூடியூபில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் , குக் வித் கோமாளி புகழ் சாலின் ஸோயாவை காதலிப்பதாக பல்வேறு புகைப்படங்களும் செய்திகளும் இணையத்தில் வைரலாது.அதனை தொடர்ந்து டிடிஎப் வாசன் ஹீரோவாக அறிமுகமாகவிருந்த மஞ்சள் வீரன் திரைப்படத்தில் இருந்து இவர் சில தனிப்பட்ட காரணங்களுக்காக நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
பல்வேறு சர்சைகளில் சிக்கி கைதாகியே பிரபலமான டிடிஎப் வாசன் தற்போது இதுவரையில் யாரும் செய்யாத வகையில், வீட்டை விட்டு ஓடிபோய் திருமணம் செய்வதையே கன்டென்டாக மாற்றியிருக்கின்றார்.
இந்நிலையில், டிடிஎப் வாசன் தற்போது வெளியிட்டுள்ள தனது திருமணத்தின் முழுமையான காணொளி இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |