முடி தாறுமாறாக வளர வேண்டுமா? கறிவேப்பிலை ஊறுகாய் செய்யும் அற்புதம்
முடிவளர்ச்சி, உடலில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் கறிவேப்பிலையை உணவில் அதிகமாக பயன்படுத்துவார்கள்.
ஆனால் தாளிப்பதற்கு பயன்படுத்தப்படும் கறிவேப்பிலையை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தூக்கி போட்டுவிடுகின்றனர். இவற்றினை கறிவேப்பிலை சாதமாகவும், துவையலாகவும் சாப்பிட்டால் அனைத்து சத்துக்களும் உடம்பில் சேரும்.
தற்போது கறிவேப்பிலையில் ஊறுகாய் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 5 கப்
புளி - 50 கிராம்
நல்லெண்ணெய் - 250 கிராம்
உப்பு பெருங்காயம் - தேவையான அளவு
கடுகு 1 ஸ்பூன்
மிளகு சீரகம் 1ஸ்பூன்
மல்லி விதை1 ஸ்பூன்
வெந்தயம் 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு - 1
மிளகாய் வத்தல் - காரத்திற்கு தேவையான அளவு
வெல்லம் - சிறிதளவு
செய்முறை
முதலில் கறிவேப்பிலையை நன்றாக கழுவி காய வைக்க வேண்டும். சூடான தண்ணீரில் புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் தூள், பெருங்காயம், மஞ்சள் தூள், புளி இவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் தாளிப்பதற்கு கடுகு, வெந்தயம், மற்றும் ஒரு கைப்பிடி பூண்டு, 4 வர மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
ஒரு கைபிடி கறிவேப்பிலை சேர்த்த பின் நாம் அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அடுப்பை குறைவான தீயில் வைத்து நன்றாக வேக விட வேண்டும். பச்சை வாசனை சென்று எண்ணெய் பிரியும் வரை அடுப்பில் வைத்து இறுதியாக வெள்ளத்தை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
தற்போது சுவையான கறிவேப்பிலை ஊறுகாய் தயார். இதனை ஜாடி ஒன்றில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |