விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன த்ரிஷா.. என்ன சொல்லியிருக்கிறார்?
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா புகைப்படத்துடன் கூடிய வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தான் தளபதி விஜய்.
இவர் நேற்றைய தினம் முதல் தன்னுடைய 50வது வயதில் காலடி எடுத்து வைத்தார்.
தற்போது அரசியலில் நுழையவுள்ளதால் நாடு முழுவதும் பிறந்த நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இருந்தாலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் மரணங்கள் ஏற்பட்டதால் தன்னுடைய பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என விஜய் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் விஜய்க்கு எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
அந்த வரிசையில் நடிகை த்ரிஷாவும் விஜய்க்கு பிறந்த வாழ்த்து செய்தியை இன்ட்ஸ்கிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில் ஆங்கில பாடல் வரியொன்றையும் குறிப்பிட்டிருந்தார்.
அதில், அமைதியில் இருந்து புயல். புயலில் இருந்து அமைதி.. இன்னும் பல மைல்கற்களை அடைய வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |