மாமியாருக்காக நியாயம் கேட்க சென்ற பாக்கியா- கேட்ட கேள்வியில் வாயடைச்சி போன கோபி
மாமியாருக்காக கோபியிடம் பாக்கியா சண்டைக்கு செல்கிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், தற்போது ராதிகா - கோபியின் கதை முடிந்து பாக்கியா- கோபியின் கதை ஆரம்பமாகியுள்ளது.
தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை வைத்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் கோபி இறங்கியுள்ளார். இதற்கு செழியன் மற்றும் எழில் இருவருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வீண் பழியுடன் வீடு திரும்பிய ஈஸ்வரி
இந்த நிலையில், ராதிகாவையும் ஈஸ்வரியையும் ராதிகா வீட்டிற்கு அழைத்து கோபி வைத்திருந்தார்.
வந்த காலத்திலிருந்து சண்டையாகவே கதைக்களம் சென்றுக் கொண்டிருந்தது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், ராதிகா தவறி விழுந்து அவரின் குழந்தை கலைந்து விட்டது. இதற்கு காரணம் ஈஸ்வரி தான் என ராதிகாவும் அவரது அம்மாவும் வீண்பழி சுமத்தியுள்ளனர்.
அத்துடன் நிறுத்தாமல் குழந்தையை ஈஸ்வரி தான் கொன்று விட்டார் எனக் கூறி அவரை அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர்.
பாக்கியா கேட்ட கேள்வியால் திணறிய கோபி
மனமுடைந்து போன ஈஸ்வரி, வீட்டிற்கு வந்து அழுதுக் கொண்டே இருக்கிறார்.
கடுப்பான பாக்கியா கோபியிடம் சென்று, “ உங்க அம்மா தான் குழந்தை கொன்றார் என்றால் நம்ப முடிகிறதா? நானே இதை நம்பல நீங்க எப்படி அவங்கள அப்படி சொன்னீங்க..” என கேட்கிறார்.
பாக்கியாவின் கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்க முடியாமல் திணறியப்படி கோபியும் நிற்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |