ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்தது திரிஷாவின் 'தி ரோடு' டிரைலர்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'தி ரோடு' எனும் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
புலனாய்வு அதிகாரியாக த்ரிஷா
மதுரைக்கு அருகில் உள்ள ஒரு குறித்த சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றது. இதன் பின்னனியில் என்ன மர்மம் இருக்கின்றது என கண்டுப்பிடிக்கும் புலனாய்வு அதிகாரியாகவே த்ரிஷா இப்படித்தில் களமிறங்கியுள்ளார்.
அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'தி ரோடு'. இதில் திரிஷா, ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம். எஸ். பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல.ராமமூர்த்தி, லட்சுமி பிரியா, சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் கே. ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.
திரில்லர் ஜேனரில் அமைந்திருக்கும் இந்த திரைப்படத்தை ஏஏஏ சினிமா பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. எதிர்வரும் அக்டோபர் மாதம் 6 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது.
காதலிப்பதிலும் பழிவாங்குவதிலும் ஆணை விட பெண் காட்டுமிராண்டித்தனமானவள்' என்ற அறிமுக மேற்கோளுடன் தொடங்கும் இப்படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
“எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து இங்கே வந்து உயிரை விடுறாங்க ... என்ற வசனம் டிரைலரில் ஓங்கி ஒலிக்கின்றது. திரில் நிறைந்த இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |