17 வயதில் தற்கொலை செய்து கொண்ட நடிகை ஷோபா
பிறக்கும் போதே நடிக்கும் வரம் வாங்கிவந்த நடிகை ஷோபா சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக பல சாதனைகளை நிகழ்த்தியவர்.
இவரின் வாழ்க்கை பக்கங்களில் பலரும் அறிந்திராத அத்தியாயங்களை பற்றியே இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகையாக இருந்த ஷோபா கேரளாவில் பிறந்தார், இவருடைய இயற்பெயர் லட்சுமி மகாலட்சுமி.
தட்டுங்கள் திறக்கப்படும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.
1978ம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் 'நிஜமும் நிழலும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
தொடர்ந்து பாலு மகேந்திராவின் பசி, முள்ளும் மலரும், அழியாத கோலங்கள், மூடு பனி போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.
தமிழின் மிகச்சிறந்த இயக்குனரான பாலு மகேந்திரா அவர்கள் சோபாவின் ஒவ்வொரு அசைவையும், அழகான நடிப்பையும் அழகாக காண்பித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இருவரின் காதலும் திருமணத்தில் முடிந்தது.
பாலு மகேந்திரா ஷோபாவை திருமணம் செய்யும் போது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்தது.
ஷோபனா இன்னும் பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெறுவார் என்று எதிர்பார்த்து இருந்தார்கள்.
ஆனால், 1980 ஆம் ஆண்டு திடீரென்று ஷோபா தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது, அப்போது அவருக்கு வெறும் 17 வயது தான்.
இவருடைய தற்கொலை இதுவரையிலும் புரியாத புதிராகவே இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |