சர்ச்சைகளுக்கு நடுவில் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற த்ரிஷா! இதை கவனித்தீர்களா?
தமிழக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொண்ட நடிகை த்ரிஷாவின் செம கியூட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
த்ரிஷா - விஜய் சர்ச்சை
விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் த்ரிஷாவை பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையாக கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்தது தான்.

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், அதனை தொடர்ந்து ஒரு திருமண நிகழ்ச்சிக்கு த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் ஜோடியாக வந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதற்கு பின்னர் பல்வேறு விமர்சனங்கள் அவர்கள் மீது வந்த நிலையில் அதை பற்றி த்ரிஷா எந்தவித விளக்கமும் இதுவரையில் கொடுக்கவில்லை.

இந்நிலையில் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தவெக தலைவர் விஜய், C ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியை ஏற்றுக்கொண்டார்.
முதலமைச்சரான ஜோசப் விஜய்க்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில், பதவியேற்பு விழாவில் அசத்தல் லுக்கில் வந்த நடிகை திரிஷா பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

மேலும் பத்திரிக்கையாளர்களிடன், முதலமைச்சரான விஜய்க்கு வாழ்த்துகள் என கூறியும் சென்றுள்ளார். மேலும் விஜய் அம்மாவை கட்டியணைத்துடன் ஆசீர்வாதமும் பெற்றுள்ளார்.
அழகிய சேலையில் புன்னகையுடன் பங்கேற்ற திரிஷாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.



