கடகடவென உயர்ந்த குந்தவை த்ரிஷாவின் சம்பளம்: எத்தனை கோடி தெரியுமா?
தமிழின் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷாவின் சம்பளம் கோடிகளில் உயர்ந்துள்ளதாக பேசப்படுகிறது.
மொடல் அழகி டூ டாப் நடிகை
மொடலிங் செய்து வந்த த்ரிஷா 1999ம் ஆண்டு நடைபெற்ற சென்னை அழகி போட்டியில் வெற்றி பெற்றார், இதன் மூலம் ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி லேசா லேசா படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார்.
தொடர்ந்து எனக்கு 20 உனக்கு 18, மௌனம் பேசியதே, சாமி, கில்லி என வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தார்.
இவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா, 96 போன்ற படங்களில் த்ரிஷாவை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்று கூறும் அளவுக்கு அசத்தலான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்.
சுமார் 10 ஆண்டுகளை தாண்டியும் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்துடன் வலம்வரும் த்ரிஷா, பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்து வியப்பூட்டினார்.
சம்பளத்தை உயர்த்திய த்ரிஷா
இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் த்ரிஷா சம்பளத்தை கணிசமாக உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது பொன்னியின் செல்வனுக்கு முன் 1.5 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த த்ரிஷா, புதிதாக ஒப்பந்தம் ஆகும் படங்களுக்கு ரூ.3 கோடி வரை சம்பளம் பெறுகின்றாராம், 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ள த்ரிஷா தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் என பேசப்படுகிறது.