இது தான் நிஜ குந்தவையா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம் - உண்மை இது தான்!
‘பொன்னியின் செல்வன்’கதையில் வரும் குந்தவையின் நிஜ புகைப்படம் என்று ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இது குறித்து சமூக வலைதள பிரபலம் வெங்கடேஷ் ஆறுமுகம் என்பவர் விரிவாக விளக்கியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இதுதான் குந்தவை புகைப்படம் என நகைச்சுவையாக வெளியிட்டிருந்த நிலையில் அந்த புகைப்படம் தான் உண்மையான குந்தவை என வைரலாகி வருகிறது.
நான் பகடியாக போட்ட பதிவு உலகம் முழுவதும் பல இணைய தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
போலியான புகைப்படம்...யாரும் நம்பாதீர்கள்
பலர் சிரித்தும், பலர் திட்டியும், பலர் அப்படியே நம்பியும் கலவையான விமர்சனங்களை அங்கு தந்து இருந்தனர்! உண்மையில் இது குந்தவை அல்ல.
தகவல் பாதுகாப்பு அணிக்கு நம் மக்கள் ரிப்போர்ட் அடிக்க இது பொய்யான செய்தி என்று முகநூலில் இருந்து என் பதிவை நீக்கிவிட்டது.
ஆனால் வேறு தளங்களில் இது இன்னும் சுற்றுகிறது இதை யாரும் நம்பாதீர்கள் என்று குறித்த நபர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதேவேளை, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக த்ரிஷா நடித்திருந்தார். அவரின் நடிப்பும், அழகும் பலராலும் ரசிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.