வேலையில்லையா? அவதூறு பரப்புபவர்களை கடுமையாக எச்சரித்த திரிஷா
அவதூறு பரப்புபவர்களுக்கு வேலையே இல்லையா? என நடிகை த்ரிஷா கடுப்பில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் இருக்கும் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் தான் நடிகை த்ரிஷா.
இவர், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளை மிக நேர்த்தியாக பேசத் தெரிந்த நடிகை. சென்னை பிறப்பிடமாக கொண்ட த்ரிஷா கிருஷ்ணன் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் களமிறங்கி விட்டார்.
கடந்த 1999ம் ஆண்டு “Miss Chennai" ஆக இருந்த த்ரிஷா, பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான "ஜோடி" படத்தின மூலம் சினிமாவிற்குள் என்றி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தவர் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான சூர்யாவின் "மௌனம் பேசியதே" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மாறிவிட்டார்.
சினிமாவிற்கு வந்த பின்னர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை ஏற்று நடிக்கும் ஆற்றல் த்ரிஷாவிற்கு உண்டு, இதனால் அடுத்தடுத்து "மனசெல்லாம்", "சாமி", "லேசா லேசா", "அலை" மற்றும் "எனக்கு 20 உனக்கு 18" ஆகிய படங்களை தன்வசப்படுத்திக் கொண்டார்.
இதற்கிடையில் தெலுங்கு திரைப்படத்திலும் வாய்ப்பு கிடைக்க, தற்போது பாலிவுட் வரை பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். தற்போது சினிமா, சமூக வலைத்தளங்கள் என இரண்டிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
கடுப்பில் வெளியிட்ட பதிவு
இந்த நிலையில், தற்போது த்ரிஷாவிற்கு 41 வயதானாலும் டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகிய GBU படத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.
படங்களில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா விமர்சனங்களுக்கு எதிராக பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “சமூக வலைதளங்களில மற்றவர்கள் குறித்து அவதூறு பரப்புவது மட்டும் தான் அவர்களது வாழ்க்கையா என்றும் அவர்களை நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இது போன்ற நபர்களுடன் வாழ்க்கை வாழ்பவர்களை நினைத்து பார்க்கும் பொழுது வருத்தமாக உள்ளது. இவர்களை நினைக்கும் பொழுது கோழைத்தனமாக தெரிகிறது. இவர்களையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக த்ரிஷாவிற்கு திருமணம் முடிந்து விட்டது என பரவிய புதிய செய்திக்கு த்ரிஷா கொடுத்த பதிலடியாக இருக்கலாம் என அவருடைய ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |