உங்களுக்கு வயசே ஆகாதா? த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்! ரசிகர்கள் கேள்வி
நடிகர் த்ரிஷா குஷ்புவின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட நிலையில், அங்கு அணிந்திருந்த புடவையில் வெளியிட்டுள்ள புகைப்பட தொகுப்பு ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தான் த்ரிஷா. இவர் முதல்வர் விஜய்யுடன் என்ன தான் சர்ச்சையில் சிக்கினாலும், தனது வேலையில் கம்பீரமாக ஜொலித்து வருகின்றார்.
தற்போது 43 வயதாகும் த்ரிஷா சினிமாவில் எவர்கிரீன் குயினாக வலம்வருகின்றார். மேலும் இந்த வயதிலும் அவர் இளமையுடனும், மற்றவர்களை பொறாமை கொள்ளும் அழகுடன் வலம்வருவது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் சிவப்பு நிற மாடர்ன் உடையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குஷ்பு மகளின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டார்.

குஷ்பு மகளின் திருமணம் கோவாவில் நடைபெற்ற நிலையில், பிரபலங்கள் பெரும்பாலும் தங்க ஜரிகையில் அமைந்தது போன்ற பட்டி வேஷ்டி, சேலைகளில் கலந்து கொண்டனர்.

மாடர்ன் உடையில் குயினாக இருக்கும் த்ரிஷா புடவையிலும் செம்ம லுக்கில் காணப்பட்டுள்ளார். ஆம் கைவேலைப்பாடுகள் நிறைந்த ப்ளவுஸ், ஆடைக்கு எடுப்பான பச்சை நிற நெக்லஸ், வெளிர் நிறத்தில் வளையல் என அணிந்து வந்துள்ளார்.

இந்த புகைப்படத்தினை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கோவாவில் நடைபெற்ற குஷ்பு மகளின் திருமணத்திற்கு த்ரிஷாவுடன், முதல்வர் விஜய்யும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியல் வேலை நிமிர்த்தமாக செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |