சர்ச்சைகளுக்கு நடுவில் மீண்டும் கொளுத்தி போட்ட த்ரிஷா! விஜய் பாடலுக்கு கொடுத்த ரியாக்ஷன்
நடிகை த்ரிஷாவை சுற்றி அண்மை காலமாகவே பல சர்ச்சை கருத்துக்கள் வலம் வந்த வண்ணம் இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் கில்லி பட பாடலை பகிர்ந்து எமோஷனல் இமோஜியை போட்டுள்ளார். குறித்த விடயம் மீண்டும் இணையத்தில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விஜய்- த்ரிஷா சர்ச்சை
நடிகரும் தவெக கட்சித்தலைவருமான விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் த்ரிஷாவை பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையாக கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்தது தான்.

சங்கீதா விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பது தான் விவாகரத்து கோருவதற்கான முக்கிய காரணம் என தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் விஜய் த்ரிஷா ஒரே நிற ஆடையில் திருமண நிகழ்வில் பங்கேற்றமை இணையத்தில் புயலையே கிளப்பியிருந்தது.

அதன் பின்னரும் சர்ச்சைகளுக்கு தீனி போடும் வகையில், சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துவிட்டு விஜய் பாடலுடன் புகைப்படங்களையும் த்ரிஷா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், மீண்டும் சிறுவர்கள் கில்லி திரைப்படத்தின் அப்படி போடு... பாடலுக்கு நடனமாடிய காணொளியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.