சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டு த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா?
நடிகை த்ரிஷாவை சுற்றி அண்மை காலமாகவே பல சர்ச்சை கருத்துக்கள் வலம் வந்த வண்ணம் இருக்கும் நிலையில், தற்போது, மே மாதப் பருவம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டது.. என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் படுவைரலாகியுள்ளது.
நடிகை த்ரிஷா
தென்னிந்திய சினிமாவின் இளவரசி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகை த்ரிஷா. இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாகவே ஜொலித்து வருகின்றார்.

நடிகரும் தவெக கட்சித்தலைவருமான விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் த்ரிஷாவை பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையாக கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்தது தான்.

சர்ச்சைகளுக்கு தீனி போடும் வகையில், சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துவிட்டு விஜய் பாடலுடன் புகைப்படங்களையும் த்ரிஷா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் திகதி வெளியாகவுள்ளது. தற்போது மே மாதப் பருவம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டது.. என குறிப்பிட்டு அசத்தல் ஸ்டைலில் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படம் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |