அம்மான்னா இப்படி தான் இருக்கணும்... ஆல்யா மானசாவை புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்!
சின்னத்திரை நடிகைகளின் பட்டடியில் டாப்பில் இருக்கும் ஆல்யா மானசா பிஸியான படப்பிடிப்புகளுக்கு மத்தியிலும் குழந்தைகளுடன் ஜாலியாக நேரம் செலவிட்டு, தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
ஆல்யா மானசா
ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி தங்களது தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் ஜெயித்து வருபவர்கள் தான் ஆல்யா மானசா.

இவர் ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் இருக்கின்றார்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.

ஆல்யா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும், பாரிஜாதம் என்ற தொடரில் நடித்து வருகின்றார்.

இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகின்றது. படப்பிடிப்பில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுடன் அழகிய தருணங்களை மிஸ் பண்ணாத நடிகை நயன்தாரா போல் ஆல்யா மானசாவும் சிறந்த அம்மாவுக்கு உதாரணமாக திகழ்கின்றார்.

இந்நிலையில், ஆல்யா குழந்தைகளுடன் குழந்தையாகவே மாறி ஜாலியாக விளையாடியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த காட்சிகளை பார்த்த இணையத்தளவாசிகள் ஆல்யாவை புகழ்ந்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |