இரங்கல் வீட்டிலும் இப்படியா? கடும் சர்ச்சையில் சிக்கிய ஷாருக்கான்... தீயாய் பரவும் புகைப்படம்
நடிகர் ஷாருக்கான் திலீப் குமாரின் மனைவி சைரா பானுவுக்கு ஆறுதல் கூறிய புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
திலீப் குமாரின் உடல் மும்பையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் முதல் இளம் நடிகரான ரன்வீர் சிங் வரை அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் திலீப் குமாரின் மனைவி சைரா பானுவுக்கு ஆறுதல் தெரிவித்த புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஆறுதல் கூற சென்ற ஷாருக்கான் கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு, டைட்டான ஜீன்ஸ் போட்டு இருந்தார்.
அவரால் அருகில் அமர்ந்து ஆறுதல் கூட சொல்ல முடியல அளவுக்கு அவரது உடை இறுக்கமாக இருந்தது. மேலும் மாஸ்க் போடாமல் இருந்தார்.
இநத புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் கடுப்பாகி, இரங்கல் தெரிவிக்க போனாலும் ஸ்டைலாதான் போவீங்களா... அப்பக்கூட உங்க ஸ்டைலை விட மாட்டீங்களா என்றும், எல்லாமே ஒரு விளம்பரம் தான் என மாறி மாறி நெகட்டிவ் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.