த்ரிஷாவிற்கு பிரபல தயாரிப்பாளருடன் திருமணம்... மீண்டும் தீயாய் பரவும் தகவல்
நடிகை த்ரிஷாவிற்கு பிரபல தயாரிப்பாளருடன் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்போதும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இருந்துக் கொண்டிருப்பவர்.
இவர் லேசா லேசா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அன்றிலிருந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாக இன்று வரை அந்த கதாநாயகி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
த்ரிஷா தற்போது விஜய்யுடன் லியோ திரைப்படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
த்ரிஷாவிற்கு திருமணம்
நடிகை த்ரிஷாவிற்கு தறபோது 40 வயதாகின்ற நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளரை தான் திருமணம் செய்யப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து த்ரிஷா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், த்ரிஷாவிற்கு தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் வரை நடந்து கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நின்றுப் போனதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |