பிறந்தநாளில் பாடல் பாடி ஜோடியாக Vibe செய்த விக்கி- நயன் தம்பதி
நேற்றைய தினம் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஜாலியாக பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ காட்சி இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, இவர் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் ஸ்டார் நடிகையாகவும் இருக்கிறார்.
நயன்தாரா 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு ஜுன் 9ஆம் திகதி திருமணமும் செய்துக் கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார். மேலும், இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என வித்தியாசமான பெயரையும் வைத்திருக்கிறார். தற்போது குடும்பம் குழந்தை என மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் விக்கி-நயன் தம்பதிகள்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில், நேற்றைய தினம் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். அவரின் பிறந்தநாளில் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இணையத்தில் இவர்களின் வீடியோ ஒன்று வைரலாகி வந்தது.
அதில் “வெண்மதி வெண்மதியே” பாடல் பாடி இசைத்து கொண்டாடியிருக்கிறார்கள். இந்த வீடியோ காட்சி இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |