த்ரிஷாவுக்கு திருமணம் முடிந்ததா? கழுத்தில் தாலியுடன் வைரலாகும் ஒற்றை புகைப்படம்!
நடிகை த்ரிஷா கழுத்தில் தாலியுடன் மணப்பெண் கோலத்தில் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள ஒற்றை புகைப்படம் இணையத்தில் அசுர வேகத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
மௌனம் பேசியதே படம் மூலமாக, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. இன்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
கில்லி, ஆதி படங்களில் நடித்த த்ரிஷா மீண்டும் 19 ஆண்டுகளுக்கு பிறகு 'லியோ' படத்தில் நடித்தார். கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, இடையில் சில வருடங்கள் சரியான கதை தேர்வு இல்லாத காரணத்தாலும், கதையின் நாயகியாக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசையிலும் தேர்வு செய்து நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், மார்க்கெட்டை இழந்தார்.
ஆனால் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், இரண்டு பாகங்களாக வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் த்ரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் அதிகம் கவனிக்கப்பட்டது.
இந்த படத்தின் வெற்றியால் த்ரிஷா மீண்டும் பிஸியான நடியாக மாறினார். மீண்டும் தளபதி விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் மட்ட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இவர் அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்தார்.
தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள குட் பேட் அக்லீ ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இது தவிர, தக் லைஃப், சூர்யா 45 மற்றும் ராம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது 41 வயதாகும் த்ரிஷா இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார்.
இந்நிலையில் திடீர் என அண்மையில் காதல் தான் வெல்லும் என குறிப்பிட்டு பதிவென்றை வெளியிட்டிருந்தார். அது இணையத்தில் வைரலானதுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த குழப்பத்துக்கு விடை கிடைக்கும் முன்னரே தற்போது கழுத்தில் தாலியுடன் மணப்பெண் கோலத்தில் தற்போது வெளியிட்டுள்ள ஒற்றை புகைப்படம் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. குறித்த புகைப்படத்துக்கு திருமண வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
