த்ரிஷாவை விட வயது குறைவு... ஆனால் அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த நடிகை யார்?
தமிழ் சினிமாவில் இளவரசி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் திரிஷா. 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாக அறிமுகமாகி,தொடர்ந்து இன்று வரையில் கதாநாயகியாகவே தன்னை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டாலும், இன்றளவும் அதே இளமையுடன் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
அஜித், திரிஷா நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து த்ரிஷா மற்றும் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலையும் வாரிக்குவித்தது.
42 வயதை எட்டிய த்ரிஷா, இன்றும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். மேலும் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் இவரும் ஒருவர்.
அடுத்து த்ரிஷா நடிப்பில் திரைக்கு வர உள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ஜூன் 5 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அபிராமி
இந்நிலையில், ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ள அபிராமி குறித்து தற்போது பலருக்கும் தெரியாத ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, த்ரிஷாவை விட அபிராமி வயது குறைவானவர்.
ஆனால், த்ரிஷா இன்றும் நாயகியாக நடிக்கிறார். அபிராமி அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷா கடந்த 1983-ம் ஆண்டு மே மாதம் பிறந்தவர்.
அபிராமியை பொறுத்தவரை அவர் 1983-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தவர். த்ரிஷா இன்றும் நாயகியாக நடிக்கிறார். அபிராமி அம்மா உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார். உண்மையில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், த்ரிஷாவை விட வயது குறைவானவர் அபிராமி என்பது பலருக்கும் தெரியாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |