திரிஷா லக்கி தான்! திரிஷாவை பற்றி ஓபனாக பேசிய நெருங்கிய தோழி
நடிகை த்ரிஷா பற்றி அவருடைய நெருங்கிய தோழி மிகவும் ஓபனாக கூறிய விடயம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா சுமார் 22 ஆண்டு காலமாக சினிமாத்துறையில் அழகாலும் நடிப்பு திறமையாலும் ஆண்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். எத்தனை இளம் நடிகைகள் வந்தாலும் த்ரிஷாவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை.
கடந்த வருடத்தில் அவர் மூன்று படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் ஒரு படம் மட்டும் மெகா ஹிட்டடித்தது. மற்ற இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்தது.

ஆனால் த்ரிஷாவிற்கு வாய்ப்புக்கள் குறைவது மட்டும் நின்றுவிடவில்லை. சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்தில் நடித்தார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்த அந்தப் படம் கடந்த மாதம் வெளியானது.
தற்போது இந்த படம் 200 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் அதிகாரப்பூர்வமாகவும் வெளியாகி உள்ளது.
விஜய், அஜித், சூர்யா ஆகிய மூன்று பேருக்கும் அதிகம் வசூல் செய்த படங்களின் ஹீரோயின் த்ரிஷா தான்.
இதனால் அவரை ரசிகர்கள் லக்கி ஷாம் என்று அழைக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை த்ரிஷா பற்றி அவரது நண்பி அர்சசனா ஒரு பேட்டியில் பேசி உள்ளார்.

அர்ச்சனாவின் பேட்டி
அர்ச்சனா பேசும் பேசும் போது "திரிஷாதான் எப்போதும் என்னுடைய லக்கி சார்ம். நாங்கள் நீண்ட வருடங்களாக நல்ல தோழிகளாக இருந்துவருகிறோம். அவர் என்னுடைய ஃபேவரைட்.
எங்களுக்கென்று ஒரு கேங் இருக்கிறது. கேர்ள்ஸ் நாங்கள் எல்லாம் சேர்ந்து அண்மையில் மொராக்கோ போய்வந்தோம். அப்போது எனது பிறந்தநாள். அதனால்தான் சென்றேன்.

அதேபோல் ஏதோவொரு ட்ரிப்பை பிளான் செய்தால்; அதை கலைத்துவிடுவது நானாகத்தான் இருப்பேன்.
திடீரென எனக்கு வேலை வந்துவிடும் என்பதால் அப்படி நடக்கும். அதை திரிஷா உள்ளிட்டோரும் புரிந்துகொள்வார்கள்" என பேசி இருந்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |