த்ரிஷாவின் நாய் வீடியோவால் எழுந்த புதிய சர்ச்சை - புலம்பிய இணையவாசிகள்
நடிகை த்ரிஷாவை பற்றி பார்திபன் முரண்பட்டுக்கொண்டு இருக்கும் நேரத்தில் தற்போது த்ரிஷா போட்டிருக்கும் நாய் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை த்ரிஷா
நடிகர் விஜய் விவாகரத்து சர்ச்சையால் நடிகை த்ரிஷாவை இணையத்தில் எல்லோரும் தாக்கி வருகின்றனர். ஆனால் த்ரிஷா இதுகுறித்து ஒன்றும் பேசாமல் மௌனமாக இருக்கிறார்.
இவர் மௌனமாக இருந்தால் பரவாயில்லை. அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாகவே இருப்பார். இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் பார்திபன் த்ரிஷாவை பற்றி மேடையில் விமர்சித்து இருந்தார்.

அதாவது 'குந்தவை குந்த வைத்தால் நல்லது' என கூறி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதன் பின்னர் த்ரிஷா பார்திபனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இதன் பின்னர் பார்திபனும் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு காணொளி பதிவிட்டு இருந்தார். அதில் 'நீங்கள் கோடிட்ட இடங்களை நிரப்புவதற்கு முன்னர் முழு காணொளி வெளியாகும்' என கூறி இருந்தார்.

அதுவும் வெளியாகி இருந்தது. இன்னுமொரு பக்கம் விஜய் மனைவி விவாகரத்து கேட்ட மனு வெளியாகி சமூக வலைத்தளத்தில் தீபோல பரவி கொண்டிருந்த சமயத்தில் நடிகை த்ரிஷா மற்றும் விஜய் சேர்ந்து திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இப்படி பல பிரச்சனை த்ரிஷாவால் வந்துகொண்டு இருக்கும் சமயத்தில் த்ரிஷா இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தனது இன்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் போட்டு கொண்டு இருக்கிறார்.

திரிஷாவின் இன்ஸ்டா பதிவு
இன்று திரிஷா தனது சமூக வலைதளத்தில் மிகவும் சாதாரணமான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில் தனது செல்ல நாயை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டில் "கனவுலகில் பூனைகளை விரட்டிக் கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை உடனே ஈர்த்தது. திரிஷாவின் இந்த பதிவுக்குக் கீழ் விஜய் ரசிகர்கள் பலரும் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
"நாயின் கனவுகளுக்கெல்லாம் கவனம் செலுத்துகிறீர்கள். ஆனால் உங்கள் செயலால் எங்கள் அண்ணாவின் முதலமைச்சர் கனவே சிதைவதற்கான நிலை வந்துவிட்டதே" என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்னும் சிலர் இது பார்திபனுக்கு எதிராக த்ரிஷா பதிவிட்டுள்ளாரா? என பல கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இவை தற்போது வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |