த்ரிஷா கையில் இருக்கும் குழந்தை யாருடையது தெரியுமா?
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா, 40வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே எவ்வளவு வயதானாலும் கதாநாயகியாகவே ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நபர் த்ரிஷா, சென்னையில் பிறந்த வளர்ந்தவருக்கு 1999ம் ஆண்டு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு சில காட்சிகள் வந்திருப்பார், தொடர்ந்து லேசா லேசா படத்தில் நடித்தார்.
அடுத்து மௌனம் பேசியதே, கில்லி, சாமி போன்ற தொடர் வெற்றிப் படங்களால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துக் கொண்டார்.
2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜெஸ்ஸியாக வாழ்ந்திருப்பார் த்ரிஷா.
பல ஆண்டுகள் கழித்து மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்த படம் 96, ஜெஸ்ஸிக்கு அடுத்தபடியாக ஜானுவாக பலரையும் கவர்ந்திருப்பார்.
இப்படி 20 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கதாநாயகியாக வலம்வந்து கொண்டிருக்கிறார் த்ரிஷா.
நேற்று த்ரிஷாவின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார், திரை நட்சத்திரங்கள், குடும்பத்தினர்கள் வாழ்த்து மழையுடன் கூடிய சந்தோஷமான கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அதில் நடிகை மியா ஜார்ஜ், தன் குடும்பத்தினருடன் த்ரிஷாவை சந்தித்துள்ளார், இதன்போது அவர் குழந்தையை கையில் ஏந்தியபடி த்ரிஷா நிற்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.