த்ரிஷா பிறந்தநாளில் தேர்தல் முடிவு! இரவோடு இரவாக எங்கு சென்றுள்ளார் பாருங்க
நடிகை த்ரிஷா இன்று தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றார்கள்.
இன்றைய தினம் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகியுள்ள நிலையில், தேர்தல் முடிவுகளுக்கான தமிழகமே பெரும் எதிர்ப்பார்பில் காத்திருக்கின்றது. இதற்கு நடுவில் த்ரிஷாவின் பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

விஜய்- த்ரிஷா சர்ச்சை
நடிகரும் தவெக கட்சித்தலைவருமான விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் த்ரிஷாவை பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையாக கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்தது தான்.

சங்கீதா விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பது தான் விவாகரத்து கோருவதற்கான முக்கிய காரணம் என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் விஜய் த்ரிஷா ஒரே நிற ஆடையில் திருமண நிகழ்வில் பங்கேற்றமை இணையத்தில் புயலையே கிளப்பியிருந்தது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் த்ரிஷா வாக்களித்துவிட்டு, கில்லி பட பாடல் உடன் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதனால் அவர் விஜய்யின் தவெக கட்சிக்கு தான் வாக்களித்து இருந்தார் என எல்லோருக்கும் தெரியவந்தது.

அதன் பின்னரும் சர்ச்சைகளுக்கு தீனி போடும் வகையில், சிறுவர்கள் கில்லி திரைப்படத்தின் அப்படி போடு... பாடலுக்கு நடனமாடிய காணொளியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

இந்நிலையில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகி இருக்கிறது. அதில் ஜெயிக்க போவது யார் என்பதை தெரிந்த்துக்கொள்ள தான் ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கிறது.

நேற்று இரவே நடிகை திருப்பதிக்கு நடிகை த்ரிஷா கிளப்பி இருக்கிறார். அவர் காரில் செல்லும் வீடியோவை வெளியிட்டு இருக்கும் நிலையில் அது வைரல் ஆகி வருகிறது.