3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!
ஜோதிடத்தில் நவ கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் யோகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என தொன்று தொட்டு நம்ப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், ஜூலை மாதத்தில் கடக ராசியில் அரிய திரிகிரக யோகம் உருவாக உள்ளது. தற்போது கடக ராசியில் குரு மற்றும் புதன் பயணித்து வரும் நிலையில், ஜூலை 16ஆம் தேதி சூரியனும் கடக ராசியில் நுழைகிறார். இதனால் குரு, சூரியன், புதன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகிறது.

இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் சாதகமான பலன்கள் கிடைக்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யாவை என்பதைப் பார்ப்போம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு 3-வது வீட்டில் திரிகிரக யோகம் உருவாக உள்ளது. இதன் தாக்கத்தால் நிதி தொடர்பான நல்ல பலன்கள் கிடைக்கும்.
தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்களும் சாதகமான மாற்றங்களும் உண்டாகும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும். தன்னம்பிக்கை அதிகரித்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள், எதிர்கால வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு 10-வது வீட்டில் திரிகிரக யோகம் அமைகிறது. இதனால் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
நிதி நிலையை மேம்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி, அதிகளவில் சேமிக்கவும் முடியும்.
எந்த வேலையையும் திட்டமிட்டு செயல்படுத்தினால், அதில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டமும் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், வெற்றியும் செல்வ வளமும் அதிகரிக்கும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு 8-வது வீட்டில் திரிகிரக யோகம் உருவாக உள்ளது. இதனால் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காணப்படும். நிதி நிலையை வலுப்படுத்தும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
பயணங்கள் மூலம் எதிர்பாராத நிதி ஆதாயங்களும் கிடைக்கலாம். இந்தக் காலகட்டத்தில் சோம்பேறித்தனத்தை ஒதுக்கிவிட்டு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டால், எந்த முயற்சியிலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |