சாப்பிட்ட பின்பு இந்த தவறுகளை செய்யவே கூடாதாம்... என்னென்ன தவறுகள் தெரியுமா?
சாப்பிட்ட பின்பு செய்யக்கூடாத சில விடயங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக சாப்பிட்ட பின்பு ஒவ்வொருவரும் சில செயல்களை செய்வார்கள். அதாவது சாப்பிட்ட பின்பு டீ குடிப்பது, இனிப்பு சாப்பிடுவது என்று கூறிக்கொண்டே செல்லலாம்.
ஆனால் நாம் சாப்பிட்ட பின்பு செய்யும் இப்படியான செயல்கள் உடலுக்கு எதிராக மாறிவிடுகின்றதாம். அவை என்னென்ன செயல்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சாப்பிட்ட பின்பு செய்யக்கூடாத தவறுகள்
சாப்பிட்ட பின்பு லெமன் ஜுஸ், ஜிகர்தண்டா, குளிர்ந்த தண்ணீர், ஐஸ்கிரீம் இவற்றினை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இவை செரிமானத்தில் கடுமையான சிக்கலை ஏற்படுத்துகின்றது.
சாப்பிட்ட உடனே படுக்கைக்கு செல்வதைத் தவிர்க்கவும். இவ்வாறு நீங்கள் தூங்கச் சென்றால் வயிற்றில் உள்ள அமிலங்கள் மேல்நோக்கி எழும்பி உணவுக்குழாய்க்குள் நுழைந்துவிடுகின்றது. இதனால் நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படும். ஆதலால் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்தே தூங்க செல்லவும்.

சாப்பிட்ட உடனே குளிக்கக்கூடாது. ஏனெனில் உணவு ஜீரணிக்க வயிற்று பகுதிக்கு அதிகப்படியான ரத்த ஓட்டம் தேவைப்படுகின்றது. நாம் அத்தருணத்தில் குளிக்கும் போது உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்த, ரத்த ஓட்ட வயிற்றுபகுதியை விட்டு விலகி, கை, கால், தோலின் மேற்பரப்பில் பாயத் தொடங்குகின்றது. இதனால் வயிறு வலி, அஜீரணம், வாந்தி, செரிமான பிரச்சனை ஏற்படும்.

சாப்பிட்ட உடனே உடற்பயிற்சி செய்வது மிகப்பெரிய தவறாகும். ஏனெனில் சாப்பிட்ட பின்பு செரிமானத்திற்காக இதயம் அதிக ரத்தத்தினை வயிற்று தசைகளுக்கு அனுப்பும். அத்தருணத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டால், ரத்த ஓட்டம் பிற தசைகளுக்கு திருப்பிவிடப்படுகின்றது. இதனால் செரிமானம் பாதிக்கப்படுவதுடன், வயிறு பிரச்சனையும் ஏற்படும். ஆதலால் சாப்பிட்ட பின்பு சிறிது தூரம் நடப்பது நல்லது.

இதே போன்று சாப்பிட்ட பின்பு மது அருந்துவது, டீ, காபி குடிப்பது, புகைப்பிடிப்பது தவறாகும். புகைப்பிடிப்பது சாதாரண நேரத்தை விட 10 மடங்கு ஆபத்தை ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றது. இந்த செயல் குடல் புற்றுநோய் அபாயத்தினை ஏற்படுத்துகின்றது.
சாப்பிட்டு முடித்த உடன் சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீரை பருகினால் செரிமானத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |