வசமாக சிக்கிய மாகாபா- பறந்து வந்த Police Complaint.. சோதனையை முறியடிப்பாரா?
சமீப காலமாக பிரபல தொகுப்பாளர்கள் சர்ச்சையில் சிக்கிய சமூக வலைத்தளங்களில் பலமாக அடிப்பட்டு வருகிறார்கள்.
மாகாபா ஆனந்த்
பிரபல தொலைக்காட்சியில் மக்களால் கவரப்படும் தொகுப்பாளராக இருப்பவர் தான் மாகாபா ஆனந்த்.
சமீபக் காலமாக பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. இது நிகழ்ச்சியை தாண்டி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக இருந்தது.
அப்போது, தனிப்பட்ட இருவருக்கு உள்ளே நடக்கும் பிரச்சனைகளில் தலையிடுவது நாகரிகமற்றது எனக் கூறி விட்டு, மணிமேகலை சொம்பு என அசிங்கப்படுத்தியதும் பொங்கி எழுந்து, செருப்பை பதிவிட்டு மணிமேகலைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தற்போது மாகாபா ஆனந்த் மீது, முறையாக அனுமதி பெறாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, பொது அமைதியை குலைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் டிவியில், தீபக், கோபிநாத், சிவகார்த்திகேயனுக்கு அடுத்து பிரபலமாக இருப்பவரான மாகாபா திருச்சி அரியமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
அதிரடி ஆக்ஷனில் இறங்கிய பொலிஸார்
இந்த நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி வாங்கவில்லை என்றும் மருத்துவ நிகழ்ச்சி எனக் கூறி அனுமதி வாங்கியுள்ளார்கள் என்றும் கூறப்படுகின்றது.
மருத்துவ முகாம் எனக் கூறி, Happy Street நிகழ்ச்சி நடத்தியதால் 2000 பேருக்கு மேல் கூடி விட்டனர். இதனை அறிந்த பொலிஸார் அனுமதியை ரத்து செய்து விட்டனர்.
இதனை தொடர்ந்து, முறையாக அனுமதி வாங்காத நிகழ்ச்சிக்கு அளவு அதிகமான கூட்டம் கூடியதால் ஏற்பாட்டாளர்கள் மீதும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபலங்கள் உட்பட மொத்தமாக 50 பேரின் மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |