உடைமாற்றும் அறையில் மறைந்திருந்தது யார்? பதற வைக்கும் காணொளி
ராட்சத மலைப்பாம்பு அனைவருக்கும் பீதியை உண்டாக்கும் ஒரு பாம்பினமாகும். அதன் பிடியில் யாராவது வந்தால், அவரது உயிருக்கு உத்தரவாதம் இருக்காது.
இந்த வீடியோவில் ஒரு கடையில் நடக்கும் வேடிக்கையான விஷயத்தை காண முடிகின்றது. இதில் ஒரு மலைப்பாம்பு துணிக்கடையின் மேல் பகுதியை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறது.
ஒரு துணிக்கடையின் டிரையல் அறையில் ஒரு மலைப்பாம்பு ஒளிந்து கொண்டிருக்கின்றது. ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்த் நந்தா தனது பதிவில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
வீடியோவின் தொடக்கத்தில், துணிக்கடையின் டிரையல் ரூமின் ஃபால்ஸ் சீலிங்கில் ஒளிந்திருக்கும் பாம்பை வெளியே எடுக்க, பாம்பு பிடிக்கும் நபர் அப்பகுதியை தட்டி உடைப்பதைக் காண முடிகின்றது. உள்ளே பாம்பு இருப்பது தெரிகின்றது. அருகில் துணிக்குவியலையும் காண முடிகின்றது. பின்பு பாம்பு பிடிக்கும் நபர் குறித்த பாம்பிடம் ஒருமுறை கடிபட்டும் லாவகமாக இறுதியில் பாம்பை பிடித்துள்ளார்.
Seems it was trying some new outfits in the trial room of this cloth store…
— Susanta Nanda IFS (@susantananda3) February 14, 2022
?:In the clip pic.twitter.com/VYVUGFSaKP