Trending Video: நைட் பார்ட்டியில் இந்தி பாடலுக்கு அனல் பறக்க ஆடிய சிறுவன்
நைட் பார்ட்டியில் இந்தி பாடலுக்கு அனல் பறக்க ஆடிய சிறுவனின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் பொழுது நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
தற்போது பிறந்த குழந்தை முதல் வீட்டிலுள்ள பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள்.
இன்னும் சிலர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதையே ஒரு வேலையாக செய்து வருகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு மாதம் ஊதியமும் கிடைக்கிறது.
அத்துடன் வீட்டிலுள்ள குழந்தைகளை வைத்து அவர்களுக்கு இருக்கும் சுட்டித்தனத்தை கூட தூண்டி விட்டு காசு பார்க்கும் அளவுக்கு எமது சமூகம் மாறி வருகிறது.
அனல் பறக்க ஆடிய சிறுவன்
இந்த நிலையில், இரவு நேர பார்ட்டியில் சிறுவன் ஒருவன் இந்தி பாடலுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் வைப் செய்கிறார்.
பார்ப்பதற்கு 3 -4 வயது வரையிலான சிறுவன் அச்சு அசல் அந்த பாடலில் வருவது போன்று ஆடுகிறார். இவரின் நடனத்தை குடும்பத்தினர் உட்பட சுற்றியிருப்பவர்கள் கைத்தட்டி வேடிக்கை பார்க்கிறார்கள்.
இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன், லைக்குகளையும் குவித்து வருகிறது. இது போன்று சிறுவர்களின் காணொளி அதே வயதில் இருக்கும் மற்ற சிறுவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என பலரும் நினைக்கிறார்கள். இதுவும் சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புரியவதில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |