குதிகால் வெடிப்பை மின்னல் வேகத்தில் குறைக்கும் உடனடி மருந்து: கடலை மா மட்டும் போதுமா?
சிலருக்கு குதிகாலில் வெடிப்பு இருக்கும்.
இது மிகுந்த சங்கடத்தையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.
இந்த பிரச்சினை குதிகால் பகுதி அதிக வறட்சிக்குள்ளாகும் போது ஏற்படுகின்றது.
குதிகால் வெடிப்பிற்கு உரிய சிகிச்சை பராமரிக்காவிட்டால் காலப்போக்கில் அது “செல்லுலிடிஸ்” எனப்படும் தோல் நோயை ஏற்படுத்தலாம்.
அந்த வகையில் குதிகால் பிரச்சினையை உடனடியாக தடுக்க என்ன செய்யலாம் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு - 3 தேக்கரண்டி
- கற்றாழை சாறு- 3 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
தயாரிக்கும் முறை
முதலில் மேற்கொடுக்கப்பட்ட மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவவும்.
அவை நன்றாக காயும் வரை விட்டு மிதமான வெந்நீரில் தேய்த்து கழுவ வேண்டும்.
பிறகு சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது வைட்டமின் இ ஆயில் கொண்டு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
இப்படி செய்தால் குதிகால் வறட்சி குறைந்து வெடிப்பு பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |