தோசைக்கு மாவே இல்லாமல் தோசை செய்யலாமா? ரெசிபி இதோ இருக்கு
காலையில் உணவு செய்யும் போது ஒரு அவசரமான சுலபமான உணவை தான் நாம் எல்லோரும் விரும்புவோம்.
அந்த வகையில் பார்த்தால் இட்லி தோசையை எல்லோரும் அதிகமாக செய்வார்கள். ஆனால் இன்று தரப்போகும் பதிவில் மாவே இல்லாமல் தோசை செய்யலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆனால் நீங்கள் வழமை போல் சாப்பிடும் தோசை போலவே இருக்கும்.
இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு – 2 கப்
- தேங்காய் துருவல்- அரை கப்
- தண்ணீர்- 4 கப்
- உப்பு – 1 ஸ்பூன்
- சர்க்கரை – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் அதை ஒரு மிக்ஸியில் சேர்த்து தேங்காய் துருவல், உப்பு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும்.
பின்னர் இதை ஒரு பாத்திரத்தில் மாற்ற வேண்டும். அதில் மீண்டும் தண்ணீர் சேர்த்து மாவாக மாற்றவும். 1 மணி நேரம் கழித்து தோசை சுட்டு எடுக்கலாம். இது மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும்.
இதனுடன் நீங்கள் வெங்காய சட்னி சேர்த்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். இதை குழந்தைகளுக்கு காலை உணவாக எடுத்து செல்ல கொடுப்பதற்கு நல்ல ஒரு உணவு.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |