இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 3 இடங்கள்
பொதுவாக அதிகமாக சுற்றுலா பயணிகள் விரும்பும் நாடுகளில் ஒன்றாக இந்தியா பார்க்கப்படுகின்றது.
இந்தியா வரும் பயணிகள் தமிழகம், டெல்லி, கோடைக்காணல் போன்ற நகரங்களை சுற்றி பார்த்து தன்னுடைய பயணத்தை முடித்து கொள்கிறார்கள்.
ஆனால் இவற்றையெல்லாம் விட மதுரையில் அதிகமாக சுற்றுாத்தலங்கள் இருக்கின்றன.
மேலும் சுற்றுலா பயணிகள் அதிகமாக ஆன்மிகம் சார்ந்த இடங்களை விரும்புவதால் இந்தியா போன்ற நாடுகளுக்கு வருகை தருகிறார்கள்.
அந்த வகையில் இந்தியாவில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
1. மைசூர்
கர்நாடக மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகராக மைசூர் பார்க்கப்படுகின்றது. இங்குள்ள அரண்மனையும், பிருந்தாவன் தோட்டமும் புகழ் வாய்ந்த இடங்களாக பார்க்கப்படுகின்றது.
அத்துடன் வனவிலங்கு காட்சியகம், சாமுண்டீஸ்வரி கோயில், மஹாபலேஸ்வரா கோயில், செயிண்ட் ஃபிலோமினா சர்ச், பிருந்தாவன் கார்டன், ஜகன்மோஹன் அரண்மனை ஓவியக்கூடம், லலித் மஹால் அரண்மனை, ஜயலட்சுமி விலாஸ் மாளிகை, ரயில்வே மியூசியம், கரன்ஜி ஏரி மற்றும் குக்கார ஹள்ளி ஆகிய இடங்கள் சிறப்பு வாய்ந்தாக பார்க்கப்படுகின்றது.
2. சிம்லா
இந்தியாவின் புகழ்பெற்ற மலைவாஸ்தலங்களில் ஒன்றாக “சிம்லா” பார்க்கப்படுகின்றது. ஷிம்லா நகரிலிருந்து 2 கி.மீ. தூரத்திலும், 8000 அடி உயரத்தில் ஜக்கு மலை உள்ளது, இங்கு பனியால் மூடிய அழகிய மலைகளை காணலாம்.
சிம்லா பற்றிய மேலதிக தகவல்களை கிறைஸ்ட் சர்ச், ஷிம்லா அரசு அருங்காட்சியகம் ஆகியவற்றில் காணலாம். இந்தியாவில் இருப்பவர்கள் குடும்பமாக செல்ல இந்த இடம் சிறந்தாக இருக்கும்.
3. லே மாவட்டம்
இங்கு அழகிய ஏரிகள், பனிகாற்று, பனிப்பாறைகள் மற்றும் மணல் குன்றுகள் இருக்கின்றன. இயற்கையை விரும்பும் பயணிகள் இங்கு வருகை தரலாம்.
அத்துடன் பாங்காங் ஏரி, சோ மோரி ஏரி மற்றும் லே பேலஸ் ஆகியவை இப்பகுதியில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்களாக பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |