உள்ளே இருப்பது வெளியே தெரியும்படியா ஆடை அணிவது?
பொதுவாகவே திருமணங்கள் என்றாலே, அனைவரும் தங்களை அலங்கரித்துக்கொண்டு வருவது வழக்கம்.
மணமக்களுக்கு இணையாக தங்களும் மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டும் என்பதே பலரின் ஆசை.
மற்றவர்களை விட நாம் தனித்துவமாக தெரியவேண்டும் என்பதற்காக தங்களின் ஆடைகளில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர்.
சில ஆடைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாலும் சில ஆடைகள் முகம் சுழிக்கும் விதமாகவும் அமைந்துவிடுகிறது. அதேபோல் தான் பெண் ஒருவர் திருமண விழாவுக்கு அணிந்து வந்த ஆடை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான செய்தியானது, ஸ்டார் நியூஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் புகைப்படமானது, that it im wedding shaming சமூக வலைத்தளப் பக்கத்தில் தான் முதலில் பகிரப்பட்டுள்ளது.
அதில் அடையாளம் தெரியாத பெண்ணொருவர் தனது தோழியின் திருமணத்துக்கு சென்றுள்ளார்.
குறித்த பெண் ஒரு வெள்ளை நிற ஆடை அணிந்துள்ளார். இதில் என்ன பிரச்சினை என்றால், உள்ளே இருப்பது வெளியே தெரியும்படியான transparent ஆடையாகும்.
அதில் பெண்ணின் உள்ளாடைகள் எல்லாம் வெளியில் தெரியும்படி அந்த வெள்ளை உடை காட்டுகிறது.
இந்த கோலத்தில் அந்தப் பெண் கூட்டத்தின் நடுவில் நிற்கும் புகைப்படம்தான் இவ்வாறு வெளியாகியுள்ளது. இவ்வாறு இந்தப் பெண் அணிந்துவந்த ஆடை, அனைவராலும் பேசு பொருளாக மாறியுள்ளது.
அதுமாத்திரமின்றி இதை வைத்து பலரும் ட்ரோல் செய்ய தொடங்கியுள்ள நிலையில், அவரவர் ஆடைத் தெரிவு அவரவர் விருப்பம் என்று சில ஆதரவு குரல்களும் கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.