பிட்காயினால் கோடீஸ்வரராகிய நபர்கள்: அடையாளம் தெரியாத நபர் செய்த காரியம்
கிரிப்டோகரன்சி என்று கூறப்படும் காயினான பிட்காயின் மூலம் இரண்டு நபர்கள் கோடீஸ்வரராக மாறியுள்ள சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கிரிப்டோகரன்சியில் குறிப்பிட்ட காயின்களை அதிகப்படியாக வைத்திருப்பவர்களை வேல் (Whale) என்று அழைக்கப்பட்டு வருகின்றனர். எடுத்துக்காட்டாக டோஜ் காயின் வேல் ஆக எலான் மஸ்க் இருக்கிறார்.
சமீப காலமாக மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் வார்த்தை பிட்காயின் என்பதே. ஏனெனில் கிரிப்டோ மார்க்கெட்டில் சரியான ஏற்றம் கண்ட இதனால் பலரும் கோடீஸ்வரர்களாக மாறினர். ஆனால் சமீப நாட்களாக யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு கிரிப்டோ மார்கெட்டில் தாறுமாறான சரிவுகளை முன்னனி காயினான பிட்காயின் உட்பட மற்ற ஆல்ட்காயின்களும் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை பிட்காயின் வேல் ஒருவர் இரண்டு நபர்களின் பிட்காயின் வால்ட்டுகளுக்கு சுமார் 1 பில்லியன் டொலர் மதிப்புடைய பிட்காயின்களை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்திய மதிப்பு படி ரூ.7397 கோடி ஆகும்.
இதில் அந்த பிட்காயின் வேல் நபரும் யாரென்று வெளிவராத நிலையில், குறித்த இரண்டு நபர்களின் விபரங்களும் சரியாக கண்டறியப்படமுடிவில்லையாம்.
இதுகுறித்து கிரிப்டோகரன்சி நிபுணர்கள் கூறுகையில், கிரிப்டோகரன்சி மார்கெட்டில் குறிப்பிட்ட பிட்காயின் மதிப்பினை குறைக்கும் நோக்கத்திலோ அல்லது தற்போது பிட்காயின் சரிவினை சந்தித்து வருவதால் தன்னிடம் இருந்த காயினை விற்காமல் இவ்வாறு பரிமாற்றம் செய்து, பெரும் இழப்பிலிருந்து தப்பிக்கலாம் என்ற நோக்கில் அடையாலம் தெரியாத வேலஸ் நபர் செய்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இந்த பிட்காயின் பரிமாற்றத்தால் அவை கிரிப்டோகரன்சி மார்கெட்டிலும் குறிப்பிட்ட சரிவை சந்திக்கவும் வாய்ப்புள்ளதாகவும், கிரிப்டோகரன்சி மார்கெட்டில் வேல்களின் நடவடிக்கைகளும் முக்கிய சந்தை மாற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் கிரிப்டோகரன்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.
