சீனர்களின் மற்றுமொரு சோதனையோட்டம்.. அடுக்குமாடி கட்டிடத்திற்குள் புகுந்து செல்லும் ரயில்!
சீனாவில் மற்றுமொரு அதிசயம் இடம்பெற்றுள்ளது என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கண்டுபிடிப்பு
பொதுவாக நாம் பார்க்கும் ரயில் பாதைகள் ஓடைகளுக்கு மேல், பாதாளங்களுக்கு மேல், பாலங்களுக்கு மேல் மற்றும் சுரங்கத்தில் மேல் கூட இருக்கும்.
மாறாக சீனாவில் ரயில்வே பாதை மக்கள் வசிக்கும் 19 மாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு இடையே அமைந்துள்ளது. கட்டிடத்தில் உள்ளே ஒரு ரயில் நிலையும் இருக்கின்றது.
அந்த வகையில், குறித்த கட்டிடத்தில் சுமாராக 6 வது மாடி துவக்கம் 8 மாடி வரை இந்த ரயில்வே பாதை இருக்கின்றது. இதன் வழியே தான் தினம் ரயில்கள் சென்று வந்து கொண்டிருக்கின்றது.
இந்த விடயம் திடீரென பார்க்கும் போது அதிசயமாக இருக்கலாம். ஆனால் இந்த சேவை சீனாவில் நீண்ட காலமாக நடக்கிறது. மேற்படி குறித்த ரயில்வே பாதையை அங்கிருப்பவர்கள், “மலை நகரம்” என அழைக்கிறார்கள்.
சீனாவில் கட்டங்கள் நிறைய இருப்பதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ரயில் செல்லும் போது சத்தம் கேட்காதாம்
ரயில்வே அமைக்கும் போது 19 மாடி கட்டிடமொன்று குறுக்காக இருந்துள்ளது. இதனை சரிச்செய்யும் முகமாக பொறியிலாளர்கள் வித்தியாசமாக யோசித்து இந்த பாதையை உருவாக்கியுள்ளார்கள்.
ரயில் செல்லும் போது சத்தம் வரும் என நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இதனையும் சரிச் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக “சைலென்சிங் டெக்னாலஜி” பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு சத்தம் கேட்காது.
இதனிடையே அங்கிருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ரயில் நிலையம் இருக்கும்.
இதனை தொடர்ந்து சீனாவில் புதிய தொழிநுட்பமாக தண்டவாளங்கள் இல்லாமல் ரயில் செல்லும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.