5 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட பாலம்! அறுந்து விழுந்த சோகம்! காப்பாற்ற கதறிய மக்கள்: விபத்தின் அதிர்ச்சி காட்சி
குஜராத் மாநிலத்தில் நேற்று மாலை யாரும் எதிர்பார்க்காத வகையில் மோர்பி பாலம் அறுந்து விழுந்து பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
மோர்பி பாலம்
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மோர்பி நகர்ப் பகுதியில் மச்சு என்ற ஆறு ஒன்று ஓடுகின்றது. இப்பாலத்தினை எளிதில் கடப்பதற்கு பிரிட்டிஷ்ஷார் இந்தியாவை ஆண்ட காலத்தில் கேபிள் பாலம் ஒன்றை அமைத்தனர்.
தற்போதும் மக்கள் அந்த பாலத்தை பயன்படுத்தி வந்த நிலையில், சில மாதங்களுக்கு இந்த பாலம் சீரமைக்கப்பட்டு ஐந்து தினங்களுக்கு முன்பு தான் குஜராத் மாநில அரசு திறந்து வைத்தது.
இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்கு சென்றவர்கள் பொழுதைக் கழிப்பதற்கு ஆற்றின் கேபிள் பாலத்தில் அதிகமாக நபர்கள் இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக பாலம் அறுந்து கீழே விழுந்துள்ளது.
சுமார் 6.20க்கு ஏற்பட்ட இந்த விபத்திற்கு பின்பு தற்போது இரவு முழுவதும் மீட்புப்படையினர் உள்ளே விழுந்த நபர்களை மீட்க போராடி வருகின்றனர். தற்போது வரை 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சமீப காலத்தில் நடந்த மிகப்பெரிய விபத்தாக இது பார்க்கப்படுகின்றது.